Home இலங்கைநெசவுத்தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பான கூட்டம் காத்தான்குடியில் நடைபெற்றுள்ளது

நெசவுத்தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பான கூட்டம் காத்தான்குடியில் நடைபெற்றுள்ளது

by admin


நெசவுத்தொழிற்துறையை மேம்படுத்துவது  தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் காத்தான்குடி பாலமுனையில் இடம் பெற்றுள்ளது.

பாலமுனையில் மிகவும் பாரம்பரியமிக்க தொழிலான  நெசவுத்தொழில் ஈடுபடுவோர் தற்போது  பல்வேறு நடைமுறைச்சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில்  இந்தத் தொழிற்துறையை பாதுகாக்கும் நோக்கில் குறித்த தொழில்துறையில் ஈடுபடுவோரை கிழக்கு முதலமைச்சர் பாலமுனை  அலிகார் வித்தியலாயத்தின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் சந்தித்துள்ளார்.

இதன்  போது அங்கு கூடியிருந்த மக்கள் தமது பாரம்பரியத் தொழிலான நெசவுத் தொழிலில் தற்போது எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்,  இதனையடுத்து  இந்த  தொழிற்துறையில் நவீன உத்திகளை புகுத்தி  நவீன நெசவு இயந்திரங்கள் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் யோசனையொன்றையும் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்ததுடன் நெசவுத் தொழில் ஆர்வமுடைய இளைஞர்கள் யுவதிகளுக்கு பயிற்சிகளை அளிக்கும வேலைத்திட்டமொன்றை  ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More