கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி டிபோச் சந்தியில் சென்றடையும் ஊர்வலமும் மேதினமும் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மே தினமே என கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக் கிழமை எழுபதாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இம்முறை நடத்தப்படும் மே தினத்தை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கான தீர்வைக் கோரி நடத்தப்படும் மேதினமாக நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஊர்வலமாக டிப்போச் சந்திவரை சென்று அங்கு கூட்டம் ஒன்றையும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்ளின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி கருத்து தெரிவித்த போது, மேற்கொள்ளப்படவுள்ள மே தின ஊர்வலத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் என்பனவும் கலந்துகொள்ளலாம் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவினர்களுக்கு நீதிக் கோரி இந்த மே தினத்தை நடத்த இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.