விளையாட்டு

போர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் சரபோவா தோல்வி


ஜெர்மனியின் ஸ்ருகாட் நகரில் இடம்பெற்ற  போர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில்   ரஷ்ய வீராங்கனை மரியா சரபோவா தோல்வியடைந்துள்ளார்.  கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற  அரையிறுதிப் போட்டியில் சரபோவா, பிரான்ஸ் வீராங்கனையான கிறிஸ்டினா மெடெனோவிக்கை எதிர்த்து போட்டியிட்டார்.
இப்போட்டியில் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை வென்ற சரபோவா, அடுத்த 2 செட்களையும் 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதன்மூலம் 6-3, 5-7, 4-6 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் ஆடாமல் இருந்த சரபோவா, இந்த தொடரில்தான் மீண்டும் ஆட வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply