Home இலங்கைமே தினக் கூட்டத்திற்கு ஆதரவு வழங்கிய காவல்துறையினருக்கு கூட்டு எதிர்க்கட்சி நன்றி பாராட்டியுள்ளது

மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு வழங்கிய காவல்துறையினருக்கு கூட்டு எதிர்க்கட்சி நன்றி பாராட்டியுள்ளது

by admin


மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு வழங்கிய காவல்துறையினருக்கு நன்றி பாராட்டுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

எவ்வித அழுத்தங்களுக்கும் கட்டுப்படாது ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறையினருக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். காவல்துறையினர் எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பேரணியில் பங்கேற்ற காரணத்தினால், மாற்றுப் பாதைகளை திறக்க வேண்டிய நிர்ப்பந்தம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காவல்துறை திணைக்களத்தில் கடைநிலை பதவிகளை வகித்து வரும் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மே தினக் கூட்டத்தை காலி முகத் திடலில் நடாத்தும் பாரிய சவாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக் கொண்ட போது தமக்கும் ஓர் அச்சம் காணப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். எனினும் சவாலை எதிர்நோக்கி அதனை மிகச் சிறந்த முறையில் வெற்றியீட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More