Home இலங்கைசரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக கடமையில் அமர்த்தும் திட்டமில்லை – பிரதமர்

சரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக கடமையில் அமர்த்தும் திட்டமில்லை – பிரதமர்

by admin


முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக மீண்டும் கடமையில் அமர்த்தும் திட்டமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு பொறுப்பாக சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என  ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் விசேட இராணுவப் பிரிவுகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வாரம் அமைச்சரவையில் குப்பை பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும், சரத் பொன்சேகா பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் பொறுப்பினை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டிருந்தார். எனினும் இவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More