ரஸ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. துருக்கியுடனான உறவுகள் மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகனிடம் தெரிவித்துள்ளார். துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன் ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு சிரிய எல்லைப் பகுதியில் ரஸ்ய யுத்த விமானங்கள் மீது துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரஸ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.