காலி முகத் திடல் மே தினக் கூட்டத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸவின் 42 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 42 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னதாக அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும், மே தினக் கூட்டத்தின் வெற்றியினால் இவ்வாறு மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.