உலகம்

வேல்ஸ் பிராந்தியத்தின் 22 நகர சபைகளுக்கான தேர்தல் இன்று ஆரம்பம்

ஐக்கிய ராச்சியத்தின் வேல்ஸ் பிராந்தியத்திலுள்ள 22 நகர சபைகளுக்கான தேர்தல் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இரவு 10 மணிவரை மக்கள் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 நகர சபைகளில் ஆயிரத்து 159 ஆசனங்களுக்காக 92 வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் பெரும்பாலான நகரங்களில் இன்று இரவு ஆரம்பிக்கப்படவுள்ள அதேவேளை, ஒன்பது நகரங்களில் முழு வாக்கு எண்ணும் பணிகள் வெள்ளிக்கிழமைவரை ஆரம்பிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.

எனினும், முழு தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் வெளியாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜுன் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னர் வேல்ஸ் நகர சபை தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply