ரஸ்யா இணையத் தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி; அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெர்மனியின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவு முகவர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. சைபர் தாக்குதல்களை நடத்தி ஜெர்மனியின் முக்கிய தகவல்களை ரஸ்யா சேகரித்துள்ளதாகவும் இந்த தாகவல்கள் சில வேளைகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பயன்படுத்தப்படலாம் எனவும் ஜெர்மனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரஸ்யா இவ்வாறு சைபர் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் ஜெர்மனியின் அரசியல் நிறுவனங்கள் மீது எவ்வித சைபர் தாக்குதல்களும் நடத்தப்படவில்லை என ரஸ்யா நிராகரித்துள்ளது.