பிரித்தானியாவுடன் சிறந்த நல்லுறவுகளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் நியாயமானதும் ஆக்கபூர்வமானதுமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகையில் ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த நல்லுறவுகள் பேணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹம்பேர்க்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேர்க்கல் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போது உள்ளதை விடவும் நெருக்கமான உறவுகளை பிரித்தானியாவுடன் கொண்டிருக்க வேண்டும் எனவும் பொருளாதாரம் மாத்திரமின்றி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளிலும் சிறந்த உறவுகளை கொண்டிருப்பது முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.