இந்தியா

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தெற்கு ஆசியா செயற்கைகோள் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜிசாட்-9 எனப்படும் தெற்கு ஆசியா செயற்கைகோள் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. சார்க் நாடுகளுக்காக வடிவமைபக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் இயற்கை பேரிடர் கண்காணிப்பு, தொலை தொடர்பு குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை சார்க் நாடுகள் மத்தியில் மேம்படுத்த உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை  4.57 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 253 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளின் மொத்த செலவை இந்தியாவே ஏற்றுள்ளது.

   இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மாலத்தீவு இலங்கை அப்கானிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply