கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது. பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் கல்வீசித் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன நிலையில் அம்மாநில ஆளுநர் வோரா, இந்தியப் பிரதமர் மோடியை நேற்றையதினம் டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம், பாதுகாப்பு சூழல் பற்றி கலந்துரையாடப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்வர் மெகபூபா முக்தி, கடந்தமாதம் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கியிருந்தார் விளக்கியுள்ள நிலையில் இந்தசந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த 2ம் திகதி இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, ஆளுனர் வோரா சந்தித்துப் பேசியிருந்ததன் அடிப்படையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் 4 ஆயிரம் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.