166
மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொட்டாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மின்சாரத்தை இடையறாது வழங்குவதாக கூறிய அரசாங்கம் மின் வெட்டை அமுல்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் , பொதுமக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love