தனக்கு கிடைத்த தேர்தல் வெற்றியின் மூலம் பிளவுபட்ட நிலையில் உள்ள நாட்டை ஒருங்கிணைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யப் போவதாகவும் பிரான்சின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
செல்லுபடியான வாக்குகளில், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்ரோங் தான்சந்திக்கவுள்ள சவால்கள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில், வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குடியேற்றம் மற்றும் வேலையின்மை பிரச்சனை போன்ற சவால்களை மக்ரோங் எதிர்நோக்கியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது