பிரித்தானிய பிரதமர் திரேசா மே விற்கு கூடுதலான ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் திரேசா மே விற்கு கூடுதலான ஆதரவு காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரித்தானியாவின் பிரதமர் மார்கிரட் டச்சர் பெற்றுக் கொண்ட செல்வாக்கிற்கு நிகராக, திரேசா மே பெற்றுக்கொள்வார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பிரிடெக்ஸ் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தனது கரத்தைப் பலப்படுத்துமாறு திரேசா மே கோரியுள்ளார். திரேசா மே க்கான மக்களின் ஆதரவு அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment