இலங்கை மலையகம்

இ.தொ.கா இந்திய பிரதமரை சந்திப்பதனை திகாம்பரம் தடுக்கின்றார்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்துவதனை அமைச்சர் பழனி திகாம்பரம் தடுக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் இந்தியப் பிரதமருடன் சந்திப்பு நடத்துவதனை தடுக்க முயற்சிக்கப்படுவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்திய பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைக்கான இ;ந்திய உயர்ஸ்தானிகராலயம், இ.தொ.காவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுமார் 30,000 ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நோர்வூட் மைதானத்திற்கு சென்ற போது அமைச்சர் திகாம்பரம் தம்மை திருப்பி அனுப்பியதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதில்லை என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply