கிழக்கின் ஆசிரியர் வெற்றிடம் தவிர்ந்த ஏனைய 2 ஆயிரத்து 765 வெற்றிடங்களும் நிரப்புவதற்கான அனுமதியை உடனடியாக தர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு முதலமைச்சு,சுகாதார அமைச்சு,விவசாய அமைச்சு மற்றும் கல்வியமைச்சு ஆகியவற்றில் உள்ள வெற்றிடங்களே உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என ஹபரணையில் இடம்பெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலே ஜனாதிபதியிடம மேற்குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர், இது தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தின் அனுமதிக்காக அனுப்பியிருந்த நிலையிலேயே இந்த வெற்றிடங்கள் நிரப்பபட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இதனடிப்படையில் முதலமைச்சின் கீழ் 331 வெற்றிடங்களும்,சுகாதார அமைச்சில் 341 வெற்றிடங்களும்.விவசாய அமைச்சில் 558 வெற்றிடங்களும் மற்றும் கல்வியமைச்சில் 1535 வெற்றிடங்களும் உள்ளடங்கலாக 2 ஆயிரத்து 765 வெற்றிடங்கள் கிழக்கு மாகாண அமைச்சுகளின் கீழ் உள்ளதுடன் அவை நிரப்பபடுவதுடன் ஊடாக மக்களுக்கான சேவைகளை மேலும் செயற்திறன் மிக்கதாய் மாற்ற முடியும் என கிழக்கு முதலமைச்சர் கூறினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.