153
களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். களுத்துறை வெலிப்பன்ன என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சாமர அபேசேகர எனப்படும் கொஸ்கொட லொக்கு என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனவும் உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love