இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தில் எவ்வித உள்நோக்கங்களும் கிடையாது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் இலங்கை பயணமானது அரசியல் அல்லது பொருளாதார நோக்கிலானதல்ல எனவும் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தரின்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் இலங்கையில் சர்வதேச வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளநிலையில் எதிர்வரும் 11ம் திகதி இந்திய பிரதமர் இலங்கைக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment