181
உலகின் முதனிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான மாரியா சரபோவா மாட்ரீட் ஓபன் போட்டித் தொடரின் இரண்டாம் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். கனேடிய வீராங்கனை ஏஜெனீ புசார்ட் ( Eugenie Bouchard )இ டம் சரபோவா தோல்வியடைந்துள்ளார். இரண்டாம் சுற்றுப் போட்டியொன்றில் கடுமையான சாவல்களுக்கு மத்தியில் ஏஜெனீ புசார்ட் வெற்றியீட்டியுள்ளார். சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த போட்டியில் 7-5 2-6 6-4 என்ற செற் கணக்கில் ஏஜெனீ புசார்ட் வெற்றியீட்டியுள்ளார்.
சரபோவாவை ஓர் ஏமாற்றுக்காரர் என குற்றம் சுமத்தியிருந்த ஏஜெனீ புசார்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love