தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் மூன் ஜே இன் (Moon Jae-in ) வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன் ஜே இன் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தென்கொரிய மக்களுக்குமே தாம் ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் சியோலில் அமைந்துள்ள Gwanghwamun சதுக்கத்தில் ஆதரவாளர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, பதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய தென்கொரியாவில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலில் மூன் ஜே இன் 41 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.