200
மாட்ரீட் ஓபன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீரர் அண்டி மரே மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரொமானியாவின் மாரியோஸ் கோபிலை 6-4 மற்றும் 6-3 என்ற செற் கணக்கில் மரே வீழ்த்தியுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னணி வகிக்கும் மரே, தர வரிசையில் 104ம் இடத்தை வகிக்கும் கோபிலை இலகுவாக தோற்கடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்த கிடைத்தது என மரே தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டில் மரே மாட்ரீட் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love