189
சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு பல முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2008ஆம் ஆண்டு சீனாவில் 7.9 ரிக்ரர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love