Home இலங்கைவடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி:-

வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி:-

by admin

வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம்ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றை புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைப்பதற்கு மத்திய அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வீட்டுக்கு 1.5 மில்லியன் ரூபா எனும் அடிப்படையில் 6 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழு தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் 6 ஆயிரம் முன்நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மறுவாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More