Home இலங்கைசூழ்ச்சித் திட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டமில்லை – மஹிந்த ராஜபக்ஸ

சூழ்ச்சித் திட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டமில்லை – மஹிந்த ராஜபக்ஸ

by admin


சூழ்ச்சித்திட்டம் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டம் எதுவம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதனையே எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியுடன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் உயர்வடைந்துள்ளதாகவும், இது அரசியல் ஸ்திரமற்ற நிலையை தோற்றுவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More