Home இலங்கைகீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இடைநிறுத்தம்

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இடைநிறுத்தம்

by admin

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில்   உயர் நீதிமன்றம் எதிர்வரும் 15ம் திகதி வரை இடைநிறுத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து குடியுரிமையை கொண்டவர் என்பதனால் அவரால், இலங்கையின் பாராளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தமைக்கெதிராக கீதா குமாரசிங்க  உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More