Home இலங்கைதமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.

by admin

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். இந்தியப்பிரதமர் இந்திய புறப்படுவதற்கு முன்னதாக  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஐ.நா.வின் சர்வதேச வெசாக் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த இந்தியபிரதமர்  இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More