180
பபுவா நியூ கினி சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவரும் சிறைக் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே இந்த 17 கைதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 57 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதுடன் தப்பிச் சென்றவர்களில் 3 பேரை அதிகாரிகள் மீளக் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Lae ல் அமைந்துள்ள Buimo சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Spread the love