Home விளையாட்டுமாட்ரீட் ஓபன் போட்டித் தொடரில் நாடால் சம்பியன் பட்டம் வென்றார்

மாட்ரீட் ஓபன் போட்டித் தொடரில் நாடால் சம்பியன் பட்டம் வென்றார்

by admin


மாட்ரீட் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ஸ்பெய்னின் ரபால் நாடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஐந்தாவது தடவையாகவும் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் ஒஸ்ட்ரியாவைச் சேர்ந்த டொமினிக் தீமை ( Dominic Thiem ) 7-6 (10-8) 6-4  என்ற செற் கணக்கில் வீழ்த்தி நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த வெற்றியுடன்  உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் நான்கு இடங்களை வகிக்கும் வீரர்களின் பட்டியலுக்குள் நடால் முன்னேறியுள்ளார். ரபால் நாடால் இதுவரையில் 14 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த வீரர் ஒருவருடன் மோதி வெற்றியீட்டக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகத் நாடால் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More