இலங்கை

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்க வேண்டாம் என கோரிக்கை


மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானங்கள் அமுல்படுத்தப்படும் வரையில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தக் கோரிக்கைக்கு மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி இந்த வாரத்தில் சாதகமான பதிலை அளிக்கும் என எதிர்பார்ப்பதாக உயர்கல்வி  அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு  பயிற்சி வழங்கும் நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பெரும்பாலும் இன்றைய தினம் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 14 other subscribers