165
வடகொரியா வேகமாக ஏவுகணைத் தாக்குதல் திட்டத்தை முன்னெடுப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு இ;து பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்யுமாறு வடகொரியாவிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ள போதும் இந்த உத்தரவுகளை மீறி வடகொரியா அணு மற்றும் ஏவுகணை பரிசோதனை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடகொரியா முனைப்புடன் தொடர்ந்தும் ஏவுகணை மற்றும் அணுத் திட்டங்களை மேற்கொள்வது பிராந்திய வலய நாடுகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
Spread the love