Home இலங்கைஊர்காவற்துறையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஊர்காவற்துறையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

by admin


யாழ்.ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்திப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து துவிச்சக்கர வண்டி விபத்தில் சிறுவன்  ஒருவன் உயிரிழந்து உள்ளார்.  ஊர்காவற்துறை நெருஞ்சிமுள்ளி எனும் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் அகிலன் (வயது 16) எனும் சிறுவனே விபத்தின் போது சம்பவ இடத்தில் உயிரிழந்து உள்ளார்.

வேலணையில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி இன்று காலை 8 மணியளவில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பாலக்காட்டு சந்தி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் மீது மோதியதிலையே விபத்து ஏற்பட்டு உள்ளது.

பேருந்து அதிவேகமாக பயணித்தமையால் தான் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது என கூறி ஊரவர்கள் பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தி இருந்தனர். குறித்த தாக்குதலினால் பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கின.

இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்துறை போலீசார் பேருந்தினை அவ்விடத்தில் இருந்து அகற்றி போலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

அதேவேளை விபத்து இடம்பெற்றதும் பேருந்தின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதனை அடுத்து சாரதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More