கொங்கோவில் சிறை உடைக்கப்பட்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். கிறிஸ்தவ பிரிவினைவாத அமைப்பினைச் சேர்ந்த தலைவர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையே உடைக்கப்பட்டுள்ளது.கொங்கோ குடியரசின் தலைநகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து இவ்வாறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த கிறிஸ்தவ பிரிவினைவாத அமைப்பின் தலைவரான நி முண்டா நிசெமி ( Ne Muanda Nsemi ) யும் மேலும் 50 கைதிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.
சிறையிலிருந்து தப்பிச் சென்ற நி முண்டா , புண்டு டிய கொங்கோ (Bundu dia Kongo) என்ற அமைப்பிற்கு தலைமை தாங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment