Home இலங்கைகிளிநொச்சியில் மஹாசேன் பலகாய அட்டகாசம்

கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய அட்டகாசம்

by admin

இன்று காலியில் இருந்து  கிளிநொச்சிக்கு  பேருந்து  ஒன்றில் வந்த  மஹாசேன் பலகாய இனவாதக் கும்பல்  ஒன்று  கிளிநொச்சி நகரின் நடுவில்  உள்ள மின்கம்பங்களில்  இலங்கையின்  தேசியக் கொடியில்  முஸ்லீம் மற்றும்  தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்  படுத்துகின்ற  இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக்கொடிகளை  பறக்கவிட்டு விட்டு யாழ் நோக்கி  தப்பி ஓடி உள்ளனர்

யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டு  மீண்டு நல்லிணக்கத்துடன்  இன மத பேதமின்றி வாழ்ந்து  கொண்டுள்ள  கிளிநொச்சி மக்களின் மனதை காயப்படுத்தியதுடன்  இனவாதத்தையும் குறித்த  கும்பல் வித்தைத்து சென்றுள்ளது என கிளிநொச்சி மாவட்ட  மக்கள் கவலை   தெரிவிக்கின்றனர் .  பின்னர்  பொலீஸாரினால் குறித்த  கொடிகள் அனைத்தும்  கழற்றி எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More