Home இலங்கைமுகமாலை மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது

முகமாலை மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது

by admin

கிளிநொச்சி  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற் அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர்; ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு  சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து;  டோர்ச் லைட்  வெளிச்சம் மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள்  காவல்துறையினர்; மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

இதன்போது காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலை  காவல்துறையினரால்  ஒலிபெருக்கி மூலம் கச்சாவெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More