அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்த்துடன் , குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஸ்யா பாடுபட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணை நடத்தி வரும் அதேவேளை இது தொடர்பில் அமெரிக்க பாராளுமன்றமும் ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் அண்மையில் திடீரென ஜேம்ஸ் கோமியை, மத்திய புலனாய்வு அமைப்பின் பதவியில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் நீக்கியிருந்தார்
இந்த நிலையில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஸ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து இடம்பெறுகின்ற விசாரணைக்கு ராபர்ட் முல்லர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சட்டமா அதிபர் வெளியிட்டுள்ளார். இதேவேளை ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க வரலாற்றில் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக மிகப்பெரிய சூனிய வேட்டை நடைபெறுகின்றதென டிரம்ப் தெரிவித்துள்ளார்.