இந்தியா

மும்பை விமான நிலைய வளாகத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞர் கைது


10 கோடி ரூபா பெறுமதழயான  போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற தமிழக இளைஞர் ஒருவர்  மும்பை விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மும்பை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த  ரகசிய தகவலினைடுத்து  மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலைய பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மும்பை சர்வதேச விமான நிலைய வளாகத்திற்கு வந்த இளைஞர் ஒருவரது உடமைகளை காவல்துறையினர் சோதனையிட்ட போது அவரது பயணப் பொதியில் 10 கிலோ எடைழய கொண்ட ஆம்பிட்டமின் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 10 கோடி ரூபா என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply