விளையாட்டு

ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டி


ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும்  ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டியிடுகின்றன.

மும்பை அணி 3-வது முறையாக கிண்ணத்தை  வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்த  முறை இடம்பெற்ற  லீக் ஆட்டத்தில் இருமுறையும், தகுதி சுற்றிலும் வலுவான மும்பை அணியை புனே வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை  வெல்லும் அணிக்கு கிண்ணத்துடன்  15 கோடி ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.  2வது இடம் பெறும் அணிக்கு 10 கோடிரூபா   பரிசுத்   தொகை வழங்கப்படும். இதுதவிர அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள், அதிக  ஓட்டங்களைப் பெற்றவர்கள் ,  சிறந்த வீரர் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply