காணாமல் போனோர் விடயத்தை கையாள்வது போன்று தங்கள் விடயத்தையும் கையாள வேண்டாம் என அரசியல்வாதிகளிடம் இரணைத்தீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுகிழமை இருபத்தோறாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் இரணைத்தீவு மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
21 ஆவது நாளாகவும் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இரணைத்தீவு மக்கள் தாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை போராட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் தெரிவித்துள்ளனர்
நேற்று சனிக்கிழமை 20-05-2017 எனது அழைப்பின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றூவான் விஜேவர்தன இரணைத்தீவுக்கு வருவார் என்றும் நிலைமைகளை ஆராய்ந்து நல்ல தீர்வு தருவார் என்றும் நல்லாட்சி அரசு தற்போது படிப்படியாக மக்களின் காணிகளை விடுவித்து வருகிறது என்றும் நம்பிக்கையோடு இருங்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவா் தெரிவித்து கூறிச்சென்றார்.
ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. இ்நத நிலையில் அமைச்சர் பிறிதொரு தினத்தில் வருவார் என பாதிரியார் ஒருவா் மூலம் அறிவித்துள்ளார் எனவும் இது தங்களை ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவுதான்; காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பயன்படுத்தி அவா்களை தற்போது தெருவில் விட்டுள்ளது போன்று தங்கள் விடயத்தையும் கையாளாதீர்கள் எனத்இணைத்தீவு மக்கள் தெரிவித்தனர்.
தாங்கள் 1992 ஆம் ஆண்டு தங்களின் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்றுவரை இரணைமாதாநகர் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் 340 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம் எனவும் சொந்த நிலத்திற்குச் செல்லவும் , அங்கு தங்கி இருந்து தொழில் செய்யவும் கோரியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் அது நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனா்
இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இரணைத்தீவு மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுகளை முழங்காவில் வர்த்த சமூகம் வழங்கியுள்ளனா்.