Home இலங்கைஇலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி

இலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி

by admin


இலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையவும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார். அரசாங்க வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இச்சேவையில் உள்ளவர்களில் வருடாந்தம்  வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டார்.

அப்படி வெளிநாடுகளுக்குச் செல்வோரை தடுத்து வைத்துக்கொள்வதற்கான வழிகள் இல்லை என்ற போதும் மக்களுக்கு இலவச சுகாதார சேவை மற்றும் இலவச கல்வியின் நன்மைகளை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய போதனா வைத்தியசாலையை இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  வேரஹெர பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலை, 20 விசேட சிகிச்சை நிலையங்கள், 814 கட்டில்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் கொண்ட முழு நிறைவான சர்வதேச தரம்வாய்ந்த வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More