அரச மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
முக்கியமான நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இன்றைய தினம் காலை 8.00 மணி முதல் நாளைய தினம் காலை 8.00 மணி வரையில் இருபத்து நான்கு மணித்தியாலங்கள் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் மருத்துவர்கள் இன்று தனியார் சிகிச்சைகளை வழங்குவதில் இருந்தும் விலகியிருப்பர் என சங்கம் அறிவித்துள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்காக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அரசாங்க மருத்துவர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
May 21, 2017 @ 13:26
அரசாங்க மருத்துவர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நாளை காலை 8.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசர சிகிச்சை நடவடிக்கைகளுக்கு இந்தப் போராட்டத்தினால் பாதிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.