160
பதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் முதல் எதிர்வரும் 26ம் திகதி வரையில் விக்ரமரட்ன பதில் காவல்துறை மா அதிபராக கடமையாற்ற உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் காலை ரஸ்யாவிற்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளதனால் பதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love