Home இலங்கைஇறக்காமம் மாணிக்கமடு பிரச்சினை தொடர்பாக ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது

இறக்காமம் மாணிக்கமடு பிரச்சினை தொடர்பாக ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது

by admin


இறக்காமம் மாணிக்கமடு பிரச்சினை தொடர்பாக  ஆராய நியமிக்கப்பட்ட குழுவினர் இன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் கூடியுள்ளனர்.   கிழக்கு மாகாண சபை கட்டடத்தில் இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,காணியமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி,எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள்,உயர் அதிகாரிகள் ,பொலிஸார் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்,

இதன் போது  இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பான தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவான முறையில் கலந்துரையாடியதுடன் பிரச்சினைகளுக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன,

மேலும் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் அங்கத்துவம் இன்றி  குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் பிரதம செயலாளர்,முதலமைச்சின் செயலாளர்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்,காணி ஆணையாளர்,அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,தொல்பொருள அதிகாரிகள்,இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர்,காணி அதிகாரிகள் மற்றும் கல்வியமைச்சரால் நியமிக்கப்படும் அதிகாரி  ஆகியோர் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரின் தலைமையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்தக் குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More