இலங்கை

ஊடகவியலாளர்கள் சவால்களை எதிர்கொள்வது எப்படி? செயலமர்வு

ஊடகவியலாளர்கள் சவால்களை எதிர்கொள்வது எப்படி? எனும் செயலமர்வு கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கள் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. மூத்த ஊடகவியலாளர் பொ. தில்லைநாதன் தலைமையில் சோலைவனம் விருந்தினர் விடுத்தியில்  இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

அவுஸ்ரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த ஊடகவியலாளாரும்,எழுத்தாளருமான லெ.முருகபூபதி  அவர்கள் ஊடகவியலாளர்கள் சவால்களை எதிர்கொள்வது எப்படி என்ற விடயத்தை தனது இருபது வருட ஊடகத்துறை அனுபவத்தின் ஊடாகவும், மற்றும் சம்பவங்கள் ஊடாகவும் கருத்துக்களை வழங்கியிருந்தார்.

ஊடகவியலாளர்கள் தாம் பணியாற்றும் நிறுவனம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும், தனிப்பட்ட நிலையிலும், நாட்டு நிலைமையிலும் எப்படி சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும்  அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்றும் தெளிவாக விளக்கியிருந்தார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap