161
அமைச்சரவை மாற்றத்திற்கு நிகராக பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் ஒன்பது அமைச்சர்கள் மற்றும் ஒர் ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவுஸ்திரேலிய பயணத்தின்; பின்னர் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சில முக்கிய திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் பதவிகள் மற்றும் அமைச்சு செயலாளர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
Spread the love