அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பெலைன்;( Michael Flynn ) பொய்யுரைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரஸ்ய நிறுவனங்களிடமிருந்து மைக்கல் உதவி பெற்றுக்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இலிஜா கியுமிங்ஸ் (Elijah Cummings ) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ரஸ்யாவுடனான தொடர்புகள் குறித்து பொய்யுரைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமது வெளிநாட்டுப் பயணங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பணம் வழங்கியதாக மைக்கல் பெலைன் கூறியுள்ள போதிலும், மொஸ்கோ பயணத்தின் போது ரஸ்ய நிறுவனமொன்றே பணம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பொய்யான தகவல்களை வழங்கிய காரணத்தினாலேயே மைக்கல் பணி நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.