இலங்கை பிரதான செய்திகள்

சம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.

வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு நாளை 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது,

அந்த அமர்வில் அவைத்தலைவரினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை இந்த சபை கண்டிப்பதுடன் இந்த செயல் தொடர்பில் பொது மக்களிடம் கவலையையும் மன்னிப்பையையும் கோருவதுடன் , அதனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதுடன் , மன்னிப்பையையும் இந்த சபை கோருகின்றது என அவசர பிரேரணையை முன் வைக்கவுள்ளார்.

7 Comments

Click here to post a comment

Leave a Reply

 • மனைவி சாப்பாடு தரவில்லை வடக்கு மாகாணசபையில் உறுப்பினர் கண்டனத்தீர்மானம்,
  மனைவி கணவரை வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டார் மாகாணசபையில் உறுப்பினர் கண்டனத்தீர்மானம். இப்படி இனிவரும் நாட்களில் நாங்கள் பத்திரிகைகளில் செய்திகளை படிக்கவேண்டிவந்தாலும் யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த போது ஊடகவியலாளரும் பொது மக்களும் சம்பந்தரிடம் கேள்வி கேட்டதால் அங்கு சம்பந்தர் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதனால் வடக்கு மாகாணசபையின் அடுத்த அமர்வில் அவசர கண்டனத்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக அவைத்தலைவர் சீவீகே சிவஞானம் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுக்கு மின்ஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
  பொது வெளியில் அரசியல்வாதி ஒருவரை பொது மக்கள் கேள்வி கேட்பதற்கும் அதற்காக மாகாணசபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியை அதே மக்கள் கேள்வி கேட்பது தவறா? சரி கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால் யார்மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படு்ம்? முள்ளிவாய்க்கால் மண்ணில் தங்கள் உறவுகளை பலிகொடுத்து 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் சரியான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாமல் சர்வதேசத்தாலும்,இலங்கை அரசாங்கத்தாலும் வஞ்சிக்கப்படும் அந்த மக்கள் மீது வடக்கு மாகாணசபையின் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படும். இது சரியா? அல்லது இவ்வாறான ஒரு விடயம் மாகாணசபைகளின் சட்ட வரன்முறைகளுக்கு ஏற்புடையதா?
  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் 2009 ஆம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்றபோது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்தார்கள். அப்படி கையளிக்கப்பட்டவர்கள் தற்போது காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களாலேயே அன்று முள்ளிவாய்க்காலில் சம்பந்தனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்தத்தாய்மார்களே தான் முதலமைச்சரின் கால்களை கட்டிப்படித்து ”ஐயா சம்பந்தனை போகச்சொல்லுங்கோ”
  ”அவன் துரோகி” என்று கூறினார்கள் அப்படியாயின் வடக்கு மாகாணசபையின் கண்டனத்தீர்மானம் என்பது உறவுகளை பறிகொடுத்த அந்தத்தாய்மார்கள் மீதா நிறைவேற்றப்படப்போகிறது?
  சம்பந்தர் அவமானப்படுத்தப்பட்டார் என்று கூக்குரலிடுவோரிடமும்,நிகழ்வை குழப்பிவிட்டார்கள் என்று ஜனநாயகம் பேசும் புத்திஜீவிகளிடமும் ஒரு விடயத்தை கேட்கவேண்டியிருக்கிறது. அதாவது 2009 இறுதிப்போர் இடம் பெற்றதன் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் நினைவேந்தல் நிகழ்வுகளை கடைப்பிடித்தனர். சில அரசியல்வாதிகளும் தமது அலுவலகங்களில் கடைப்பிடித்தனர். ஆனால் கடந்த இரண்டு,மூன்று வருடங்களாக இராணுவப்புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலில் எந்த மாற்றமும் இல்லாத போதும் மக்கள் ஓரளவு சுமூகமாக நினைவேந்தல் நிகழ்வை கடைப்படித்து வருகின்றனர். இவ்வாறான 7 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளிலும் உள்ளக ரீதியாக எந்தக்குழப்பங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக வெளியில் இருந்து இராணுவத்தாலும்,காவல்துறையினாலும்,நீதி மன்றத்தினாலும் பல்வேறு குழப்பங்களும், அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தப்பட்டபோதும் மக்கள் தமது உறவுகளை நினைந்துருகி அமைதியாக அஞ்சலித்தனர். ஆனால் இம்முறை இராணுவம்,காவல்துறை,நிதிமன்றம் என அனைவரும் தமது வழமையான வேலையைச் செய்தபோதும் உள்ளகத்தில் அதாவது நிகழ்வை நடத்தியவர்களிடத்திலேயே குழப்பத்தையும் அமைதியின்மையையும் காணக்கூடியதாய் இருந்தது. இதற்கு என்ன காரணம்?
  கடந்த 7 ஆண்டுகளிலும் நிகழ்வை அமைதியாக கடைப்பிடடித்த மக்கள் இம்முறை மட்டும் ஏன் குழப்பினார்கள்? என்ற கேள்வி எழுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு காலை ஆரம்பமான பொழுது சம்பந்தர் வந்து அந்த இடத்தில் இருந்த பொழுதும் மக்கள் அமைதியாகவே இருந்தனர். சம்பந்தர் பேசத்தொடங்கிய போதே மக்கள் சம்பந்தனின் பேச்சை கேட்க முடியாதவர்களாக குழப்பத் தொடங்கினர். சம்பந்தர் பேசுவதற்கு முன்பே அங்கு சம்பந்தருக்கு மக்களால் எதிர்ப்பு இருக்கிறது என்பதை ஏற்பாட்டாளர்களும் சம்பந்தனும்நன்கு விளங்கிக்கொண்டிருந்தனர். ஆனாலும் அந்த எதிர்ப்பையும் மீறி அங்கு தமது அரசியலை நிலை நிறுத்திவிடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டதன் விளைவே மக்களின் கேள்விகளும் குழப்பமும்.
  வடக்கு மாகாண அவைத்தலைவர் தான் சார்ந்திருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்கு பொது இடத்தில் பொது மக்களால் ஏற்பட்ட அவமானத்திற்காக மாகாணசபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் இனிவரும் காலங்களில் EPDPயும்,சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தமது கட்சித்தலைவர்களுக்கு பொது இடத்தில் அவமானம் ஏற்பட்டதற்காக கண்டனத்தீர்மானங்களை நிறைவேற்றக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபையும் அதன் உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். ஏனெனில் மேற்சொன்ன கட்சிகளையும் அதன் உறுப்பினர்களையும் மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்ற உண்மையை அவைத்தலைவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
  அதுமட்டுமன்றி கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பாக வடக்கு மாகாணசபை வாயிலை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள் முதலமைச்சரை சபை நடவடிக்கைகளுக்கு செல்லவிடாது நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் விளைவாக முதலமைச்சர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் வீடுதிரும்பினார். இந்த விடயம் அவைக்குள் இருந்த அவைத்தலைவருக்குத் தெரிந்தும் எதுவுமே தெியாதது போல முதலமைச்சர் இல்லாமலேயே அன்றைய அவை நடவடிக்கையை செய்து முடித்தார் எங்கோ ஒரு இடத்தில் தான் சார்ந்த கட்சித்தலைவருக்கு நடந்த அவமானத்திற்கு கண்டனத்தீர்மானம் கொண்டுவரத்துடிக்கும் அவைத்தலைவர் அவை வாசலில் அவை முதல்வர் திருப்பியனுப்பப்பட்டதை அவமானமாக கருதவில்லை அல்லது அதற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
  கடந்த ஏழு ஆண்டுகளும் அமைதியாக நடைபெற்ற ஒரு வணக்க நிகழ்வு இம்முறை சம்பந்தனின் வருகையாள் குழப்பமடைந்தததையிட்டு சம்பந்தன் தான் அந்த மக்களிடத்தில் மன்னிப்பு கோரவேண்டுமே தவிர மக்கள் மன்னிப்பு கோரவேண்டிய அவசியமில்லை.
  1987 ஆம் ஆண்டுக்குப்பின்னர் 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் மூலம் அதிக வாக்குகளை வழங்கி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அரியாசனம் ஏற்றிய மக்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் வடக்கு மாகாணசபையின் செயற்பாடானது அந்த மக்களின் மனித உரிமைகளை மதிக்காமல் அவர்களை ஓரம் கட்டும் ஒரு செயற்பாடாகும். எனவே வடக்கு மாகாண அவைத்தலைவர் தான் சார்ந்திருக்கும் கட்சியின் கட்சி அலுவலகமாக மாகாணசயை மாற்றுவதை தவிர்த்து எல்லோருக்கும் சமமான மக்களாட்சியை வழங்க முன்வரவேண்டும்.

  • கடந்த ஏழு ஆண்டுகளும் அமைதியாக நடைபெற்ற ஒரு வணக்க நிகழ்வு இம்முறை சம்பந்தனின் வருகையால் குழப்பமடைந்ததையிட்டு சம்பந்தன் தான் அந்த மக்களிடத்தில் மன்னிப்பு கோரவேண்டுமே தவிர மக்கள் மன்னிப்பு கோரவேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்து சம்பந்தன் மன்னிப்பு கோரவேண்டும்.

   இத்துடன் தனது பின்வரும் செயல்களுக்கும் சம்பந்தன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

   1. பெரிய முயற்சிகளை எடுக்காது போரை நிறுத்தாமல், மிக விரைவில் ஆயுதப் போராட்டம் நடத்திய அனைவரும் அழிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு நாம் ஒரு அரசியல் தீர்வை பெற முடியும் என்று இரக்கம் இல்லாமல் சித்திரை மாதம் 2009 ல் கூறியது.

   2.2016 ல் ஒரு அரசியல் தீர்வு வரும் என்று நம்பக்கூடிய மாதிரி பிரச்சாரம் செய்து, பொய் சொல்லி, ஏமாற்றி, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றது.

   3.அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தத்தை குறைத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் வலிமையைக் குறைத்தது.

   4.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களைப் பற்றி இலங்கை வாழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கி, அரசாங்கத்தை தூண்டி தமிழ் தரப்பின் பிரதிநிதியாக சில முக்கிய தீர்மானங்களையாவது இன்று வரை நிறைவேற்றி வைக்காதது.

  • வரவேற்க்கப் படவேண்டிய விமர்சனம். வளர்த்தெடுக்கப்படவும் வேண்டிய தொன்றாகும். தமிழீழப் பிரதேசங்களில், அரசாங்கத்திற்கு எதிராக, மெள்ள மெள்ள வளர்ந்துவரும் மக்கள் எழுச்சிகளை கண்டு அங்சுகிறதா மாகாண்சபை? இவ்வித எழுச்சிகளுக்கும் எமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று கூற விரும்புகிறதா மாகாணசபை?

 • தீர்மானம் நிறைவேற்றபடவேண்டிய ஒன்றுதான்.
  சிலர் இத்தனை வருடகால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஐயா; சம்மந்தன் தீர்வுவளங்க வேண்டும் என நினைக்கிறார்கள்
  ஜனாதிபதி வந்தபோது இந்த மக்கள் அவரை உரையாற்றாமல் தடுத்திருந்தால் நியாயம்தான்.
  முள்ளிவாய்க்காலில் இவ்வாறு மரணித்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வை அச்சுறுத்தலின்றி ஏற்படுத்தியவரே சம்மந்தன் ஐயாதான் என்பதை மறந்துவிடக்கூடாது

 • முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைக்கு அச்சமின்றி அஞ்சலி நிகழ்வு நடத்துவதற்க்கு ஏற்பாடு செய்து கொடுத்தவரைப் பார்த்து தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மார்கள் துரோகி பேசக்கூடாது என்று சொன்னது ஏன் ? ஒரு தாய் தனது குடும்பத்தில் 9 உறவுகளை பறி கொடுத்தேன் என்று கண்ணீர்விட்டு கதறிய சத்தம் காதில் வீழ்ந்தபின்பும் , பஞ்ச பரதேசிகளாக தங்கள் நிலபுலங்களை இழந்து நடுத் தெருவில் நின்று போராடும் மக்களை பற்றி சிந்திக்காமல் , சிங்கள கொலையாளியை தனது வீட்டுக்கு விருந்தாளியாக அழைத்து பனங்கள்ளும், நுங்கும் சீவி கொடுத்த காக்கைவன்னியன் கூட்டத்திற்க்கு தமிழ் மக்கள் மன்னிப்பு கொடுப்பார்களா ? யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் காக்கை வன்னியனை மேடைக்கு முன் இருத்திவைத்து கொண்டே செருப்படி கொடுத்தார்களே அப்போது எங்கே போனது தனிமனித அடிவருடியின் மன்னிப்பு கோரல் ? ராஜன்.

 • தமிழீழப் பிரதேசங்களில், அரசாங்கத்திற்கு எதிராக, மெள்ள மெள்ள வளர்ந்துவரும் மக்கள் எழுச்சிகளை கண்டு அங்சுகிறதா மாகாணசபை? இவ்வித எழுச்சிகளுக்கும் எமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று கூற விரும்புகிறதா மாகாணசபை? தனது ‘அறிவுத்’ திறத்தாலும், ‘அறிக்கைவிடு’ திறத்தாலும் தன்னை ஒரு தேசிய இனப்போராளியென காட்டிகொள்வதில் சாதனைகள்பல புரிந்துள்ள ‘புதிய பேச்சுப்புலி’ தலைவர், மக்கள் அணிதிரள்வதை விரும்பவில்லையென்பது தெரிகிறது. முன்னாள் பேச்சுப்புலித்தலைவர் அமிர்தலிங்கமும் இதை விரும்பவில்லை, துப்பாக்கிப் புலித்தலைவர் பிரபாகரனும் இதை விரும்பவில்லை, இந்நாள் தலைவரும் இதை விரும்பவில்லை. தேசிய இனப் போராளிகள் என்ற போர்வையில் மக்களின் எஜமானர்களாக இருப்பதையே விரும்புகிறார்கள். ‘பாவம் மக்கள்’ என்று இருந்த நிலையை இனியும் தொடரவிடக்கூடாது.
  சிங்கள-பௌத்த இனவாதத் தேசிய எஜமானர்களும் வேண்டாம்!
  தமிழ்-சைவ-வேளாள இனவாதத் தேசிய எஜமானர்களும் வேண்டாம்! தேவையானது தமிழீழ தேசிய அரசேயாகும்.
  எஜமானர்களைத் தேடிஓடாது முரணற்ற ஜனநாயகத் தலைவர்களை உருவாக்க முற்படுவோம்!