Home இலங்கைதமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்தாக்குதல்களுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்தாக்குதல்களுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

by admin

கடந்த ஐந்து நாட்களாக தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் மதத் தலங்களும், வரத்தக நிலையங்களும் பேரினவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளன.

இலங்கையை ஓர் முழுமையான சிங்கள பௌத்த தீவாக மாற்றியமைத்தல் என்ற மகாவம்சத்தின் அடிப்படையிலான பேரினவாத கனவை நனவாக்க இந்த நாட்டின் அரசியல் ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும் முழுமையாக சிங்கள பௌத்தர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பது பேரினவாதிகளின் எதிர்பார்ப்பு.

தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியும், பொருளாதார பலமும் ஸ்ரீலங்கா அரசினால் இன அழிப்பு யுத்தம் ஒன்றின் மூலம் சிதைத்து அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் பொருளாதார ரீதியாக பிரமிக்கத்தக்க அளவில் முன்னேறியிருக்கிறார்கள் என்ற விடயம் பேரினவாகளின் கனவுக்கு இடையூறாக அமைவதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தற்போது முஸ்லீம் மக்கள் பேரினவாதிகளால் இலக்குவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

இத்தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்து தமிழ் மக்களையும் மேற்படி போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்                                                                       செல்வராசா கஜேந்திரன்
தலைவர்                                                                                                                பொதுச் செயலாளர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More