இலங்கை

வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம்

வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை விடுத்தார்.  ஆத்துடன்இதுவரையில் என்ன நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனை செய்யவில்லை என்றும் பட்டியல் படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே சபையின் செயற்பாடுகள் தொடர்பான விவாதம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் நடைபெறும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply