170
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் அகமட் கான் ஷிப்ரா (Dr. Sarfraz Ahmad Khan Sipra ) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அழிவுகள் பெரும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் தோள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love